அருள்மிகு ஸ்ரீ மௌனகுரு சுவாமி திருக்கோவில்
தோட்டியோடு,நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
” மௌனமா முனியே போற்றி முத்தருள் முதல்வா போற்றி ஞான நற்குருவே போற்றி நற்குண குன்றே போற்றி கானகத்தமர்ந்த கருணையின் கடலே போற்றி தீனதயாள நித்திய நிமலனே போற்றி போற்றி “
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து எட்டாவது கிலோமீட்டரில் அமைந்துள்ள தோட்டியோடு என்ற ஊரில் வலதுபுறம் மலைக்கு செல்லும் பாதையில் மௌனகுரு சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது
இங்கு பௌர்ணமி சிறப்பு பூஜை உண்டு.அன்று கோமாதா பூஜைம் உண்டு பூஜை முடிந்ததும் அன்னதானம் வழங்கப்படும்.இத்திருக்கோவிலின் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்காக வெளியூரிலிருந்து வரும் அன்பர்களுக்கு எல்லாம் நடுப்பகல் உணவு கோவிலிலே கொடுக்கப்படுகிறது. எல்லா பௌர்ணமி நாட்களிலும் முழு நாள் வழிபாடு நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அகவல் பாராயணமும், நடுப்பகல் மகேஸ்வர பூஜையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிமுதல் சிவபுராணம் ஓதுதல், அர்ச்சனை, பஜனை, சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இரவு 10 மணிக்கு மேல் நிலா பூஜை நடைபெறும். ( நிலா பூஜை என்பது ஒரு பீடத்தில் நிலாவுக்கு நிவேதனம் படைத்து தீபாராதனை கொடுத்து, வெண்ணிலவு பாட்டு பாடப்படுகிறது ) இரவு பத்து மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். பவுர்ணமிதோறும் உள்ளூரில் இருந்தும், வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து ஸ்ரீ மௌனகுரு சுவாமியின் அருள் பெற்று செல்கின்றனர்.
சுவாமிகளின் குருபூஜை ஆனது ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சதய நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கி சமய மாநாடு,பஜனை, சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மாபெரும் அன்னதானம் நடைபெறும். மாலை பஜனை, தீபாராதனை நடைபெறும். பல மரியாதைக்குரியவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். (1994 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் கேரள அமைச்சர் பந்தள சுதாகரன் அவர்கள் வந்து தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ).
ஆண்டுதோறும் ஆனி மாதம் பூந்துறை சுவாமிகள் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படும். இந்த விழாவிலும் பஜனை, வழிபாடு, பிரசாதம் வழங்கல் ஆகியவை நடைபெறும்.
மௌனகுரு சுவாமிகள் அவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் அதிசயமாகவும் அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த அற்புதங்களையும் அவருடைய பிறப்பு முதல் அவர் ஜீவ சமாதி ஆனது வரை நீங்கள் படிக்க ஆசைப்பட்டால், இந்த கோயில் நிர்வாகி சுகதேவன் ஐயா அவர்களுடைய மொபைல் நம்பர் நான் இதில் கொடுக்கிறேன், நீங்கள் அவரிடம் இந்த மௌனகுரு சுவாமிகள் உடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கோவிலின் மௌனகுரு சுவாமி வாழ்ந்த காலத்தில் அவர் வணங்கிய நாகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த நாகர் சிலை அருகே அணையா விளக்கு ஒன்று எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.
இந்த திருத்தலத்திற்கு வருகை தந்த பெரியவர்கள் திருவாடுதுறை ஆதினம், அமெரிக்காவின் லியோ , அப்பு பரமகம்சர், மதுரானந்த அடிகளார், நித்தியானந்த சுவாமிகள்.மற்றும் சக்தி வாய்ந்த பெரியவர்கள் வந்து சென்றுள்ளனர்.
ஸ்ரீ மௌனகுரு சுவாமி கோவில் தர்மகர்த்தா திரு சுகதேவன் அய்யா அவர்கள்
அவர்களுடைய மொபைல் நம்பர் : 9486863377
https://srimounaguruswamy.blogspot.com
*********************************************************************************************
ஶ்ரீ சுக தேவன் ஸ்வாமிகள்

ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள் சிலை

*************************************************************************************************
ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள் பூஜித்த நாகர் சிலை

*********************************************************************************************
ஶ்ரீ மௌனகுரு சுவாமிகள்








