
அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில்
நாகர்கோவிலில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் வலது புறம் அமைந்துள்ளது. தக்கலையில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
அருள்மிகு மண்டைக்காடு அம்மன் திருக்கோவிலில் சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் தினம் தினம் எல்லா ஊர்களிலிருந்தும் வந்து வழிபட்டு வருகிறார்கள். இந்த திருக்கோவிலில் உள்ள அம்மன் தாமாகவே தோன்றிய அம்மன், இந்த அம்மன் சுயம்புவாக எழுந்தருளி அம்மன்.இது பெண்களின் சபரிமலை ஆகும். இந்த கோவிலுக்கு பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப் பயணமாக வருகிறார்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மண்டைக்காடு அம்மனை வேண்டியபடியே இங்குள்ள கடலில் புனித தீர்த்தம் ஆடி வணங்குவார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் திருவிழா மாசி மாதம் நடைபெறும். பத்தாம் நாள் திருவிழா அன்று இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கும், அந்த ஒடுக்கு பூஜையில் பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு படைப்பார்கள், இந்த நைவேத்தியங்களை கோவிலுக்கு அருகே அமைந்துள்ள சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்படும், இங்கு தயாரிக்கப்பட்ட நைவேத்தியங்களை ஓலைப்பெட்டிகளில் மேளங்கள் முழங்க தாய் மண்டைக்காடு அம்மன் சந்நிதிக்கு எடுத்துவரப்படும், அம்மனுக்கு பின்பு படைக்கப்பட்டு அந்த பிரசாதங்கள் பக்தர்களுக்கு நெய்வேத்தியமாக வழங்கப்படும்
அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்