அருள்மிகு சாய்பாபா திருக்கோயில், பொத்தயடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நாகர்கோவிலில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் பொத்தயடி என்னும் ஊரில் வலதுபுறம் அமைந்துள்ளது. இந்த சாய்பாபா திருக்கோவில் பார்ப்பவரை வியக்க வைக்கும் கண்கொள்ளா அழகு. இங்கு துவாரகாமாயி அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ தத்தாத்திரேய சுவாமிகள் உள்ளனர். மற்றும் சாய்பாபா கோவிலின் கீழ்தளத்தில் தியான மண்டபம் உள்ளது. இங்கு தியானம் செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு தினசரி பூஜை நடைபெறுகிறது இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்காக டீ காபி டிபன் சாப்பிடுவதற்கு ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது, மற்றும் கார் பார்க்கிங் வசதி மிகச் சிறப்பாக உள்ளது,பக்தர்களுக்காக கழிப்பறை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சாய்பாபா கோயில் அமைப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.இத்திருக்கோயிலில் உள்ள சாய்பாபா படத்திலிருந்து வேண்டிய செல்வங்களை அள்ளித்தரும் கருணாமூர்த்தி ஆகவே காணப்படுகிறார்.
பொத்தயடி ஸ்ரீ சாய்பாபா ஆனந்த ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களை எப்பொழுதும் கண்ணை இமை காப்பது போல் காப்பார் என்பது மிகவும் உறுதி.
திருக்கோயில் காலை 6.50 am மணி முதல் மதியம் 12 pm மணி வரை, மாலை 4.50 pm முதல் 8.50 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும். காலை 6 am மணிக்கு காலை ஆர்த்தி நடக்கும், காலை 7 am மணிக்கு அபிஷேகம், 7 45 am மணிக்கு அஷ்டோத்திரம் 12 pm மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும், பின்பு மாலை 6.50 pm மணியளவில் மாலை ஆர்த்தி நடக்கும், இரவு 8 pm மணிக்கு இரவு ஆர்த்தி நடக்கும், இது தினசரி பூஜையாக நடைபெறுகிறது.