அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில், பொத்தயடி,மருந்துவாழ்மலை

அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில் மருந்துவாழ்மலை திருக்கோவில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் பொத்தயடி என்னும் கிராமத்தில் மருந்துவாழ் அடிவாரத்தில் வைகுண்டபதி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது .இந்தக் கோவில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பபரப்பில் அமைந்துள்ளது
ரிஷிமூலம் நதிமூலம் அறிய முடியாதது போல் ஸ்வாமிகள் எங்கிருந்து வந்தவர்கள் எந்த ஊர் எந்த பெயர் என்ன ஜாதி என்ன மதம் என்று எதுவுமே தெரியாது
இந்த கோவில் நிர்வாகி தூத்துக்குடி மாவட்டம் திரு ராஜமாணிக்கம் ஐயா அவர்கள்.
ராஜமாணிக்கம் அய்யா அவர்கள் கன்னியாகுமரியில் வாழ்ந்த ஸ்ரீ மாயம்மா அவர்களை தரிசனம் செய்வதற்காக வந்திருந்த நேரம், ஸ்ரீ மாயம்மா அவர்கள் ராஜமாணிக்கம் ஐயாவிடம் காரை எடு நான் உன்னை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி அய்யாவோடு வைகுண்டபதி கோயிலுக்கு வந்து ஸ்ரீ நயினார் சுவாமியை ராஜமாணிக்கம் ஐயாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இந்த சம்பவத்திற்கு பிறகு திரு ராஜமாணிக்கம் அய்யா அவர்கள் ஆஞ்சநேயா அவதாரம் கொண்ட சுவாமி ஸ்ரீ நயினார் சுவாமியை அடிக்கடி பார்ப்பதற்கு வந்தார். காலப்போக்கில் சுவாமியின் மகிமையை உலகத்தார் அறிந்து கொண்டு வழிபட ஆரம்பித்தனர்.
காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை நடை திறந்திருக்கும்

