Categories
Kanyakumari District Temples

அருள்மிகு களியங்காடு சிவபுரம் சிவன் கோவில் நாகர்கோவில்

அருள்மிகு களியங்காடு சிவபுரம் சிவன் கோவில் நாகர்கோவில்

மார்த்தாண்ட வர்மா அவர்களின் ஆட்சி காலத்தில் அந்த மன்னர் இந்த வழியாக வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரிகள் அவரை கொலை செய்ய துரத்தி சென்றனர் அப்பொழுது அவரை இந்த சிவன் கோவிலில் உள்ள அதாவது சிவபுரம் சிவன் கோவிலில் உள்ள அர்ச்சகர் அவரது உடைகளை அரசருக்கு கொடுத்து அரசரை காப்பாற்றி திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார் பின்பு மன்னருடைய உடையில் இருந்த அர்ச்சகரை  துரத்தி வந்த கும்பல் கொலை செய்தது.  இது மன்னருக்கு பின்பு தெரிந்து கொஞ்சம் இடத்தை கோவிலுக்கு கொடுத்ததாக  செவிவழி  வரலாறு  சொல்லுகிறது ,இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பார்வதிபுரத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலானது தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் புதிய தங்க நாற்கரச்சாலை முகப்பில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சிவன் தாய் மீனாட்சி கணபதி  நாகர்  தட்சிணாமூர்த்தி  பாலமுருகன்  ஐயப்பன்  மகாவிஷ்ணு நாராயணர்  சண்டிகேஸ்வரர் நவக்கிரகங்கள்  கால பைரவர் சன்னதி  கால பைரவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது இந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடக்கிறது மற்றும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எல்லா தெய்வங்களுக்கும் அந்தந்த முக்கிய தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது கோவிலின் முன்பு அழகான தெப்பகுளம் அமைந்துள்ளது இந்த கோவில் தற்போது புனரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது இந்த கோவில் நாகபுஷ்பம் வில்வம் ஆகிய தலவிருட்சங்கள் அடங்கியுள்ளது

இது நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் களியங்காடு அருகே உள்ள சிவபுரத்தில் அமைந்துள்ளது

இத்திருக்கோவில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

Categories
Kanyakumari District Temples

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது சுமார் மூவாயிரம் வருடங்கள் உலகத்தில் உள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று .இந்த குமரி பகவதி அம்மன் கொடிய அரக்கர்களை அளிப்பதற்காக தோன்றி பானாசுரன் என்ற அரக்கனை கொன்று பின்பு சிவனை மணம் புரிய வேண்டி, அது முடியாத காரணத்தினால் கன்னியாகவே கன்னியாகுமரியில் கன்னியாகுமரியில் தவநிலையில் நின்று மக்களுக்கு அருள் வழங்கி வருவதால் கன்னியாகுமரி என்று அழைக்கலாயிற்று

சுவாமி விவேகானந்தரும் இத்தலத்துக்கு வந்து அருள்மிகு பகவதியை வணங்கிவிட்டு தியானத்தில் அமர்ந்த இடம் தான் தற்போதைய விவேகானந்தர் பாறை ஆகும்

இந்த பகவதி அம்மன் கோவில் அருகே தான் திருவள்ளுவருடைய சிலையும் இருக்கிறது

இந்த தலத்தில் தான் அம்மா மாயம்மா அவர்கள் வாழ்வில் சில காலம் இங்கு தங்கியிருந்தார்

காசிக்கு சென்று வழிபட்டவர்கள் கன்னியாகுமரி வந்து வணங்க வேண்டும் என்பது விதியாகும் ஆகையால் காசிக்குச் சென்று வழிபடுபவர்கள் எல்லோரும் கன்னியாகுமரியில் வந்து வணங்கி விட்டு சென்றால் தான் தனது பிரார்த்தனைகள் முழுமை அடைவதாக கருதுகிறார்கள்

சூரியன் மறைவதையும் சந்திரன் உதயமாவதையும் ஒரே நேரத்தில் ஒரு சேர நிகழ்வதை காணுவது மிகவும் சந்தோசமான நிகழ்ச்சியாகும்

இந்த பகவதி அம்மன் மூக்கில் ரத்தின மூக்குத்தி உள்ளது இந்த மூக்குத்தியில் இருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் ஒளி போலவே இருக்கும்

அக்காலத்தில் பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறந்து வைப்பது வழக்கமாக இருந்தது பின்பு அம்மனுடைய மூக்குத்தியில் இருந்து வந்த ஒளியானது கப்பல் திசைமாறி இங்கு வருவதற்கு காரணமாக அமைந்தமையால் அந்த கோவிலின் கிழக்கு வாசல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது

பிதுர்க்கடன் கழிப்பதற்காக உலகத்தில் எல்லா இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பிதுர்க்கடன் நிவர்த்தி செய்கின்றனர்

தினமும் உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து இங்கு உள்ள விவேகானந்தர் தியானம் செய்த இடம் திருவள்ளுவர் பிறந்த இடம் அம்மா மாயம்மா தேவி வாழ்ந்த இடம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாவற்றையும் கண்டுகளித்து சந்தோஷமாக செல்கின்றனர்

இந்தியாவில் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது

இத்திருக்கோவில் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

Categories
Kanyakumari District Temples

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோவில் நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோவில் நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோவில். இந்த கோவிலில் மூலவர் நாகராஜா சுவாமி. இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஓடவள்ளி ஆகும். இந்த கோவிலின் மூலவர் சுயம்புவாகத் தோன்றிய நாகராஜா சுவாமி ஆவார், மேலும் இந்தக் கோவிலின் தெப்பக் குளம் தீர்த்தமாக அமைந்துள்ளது. முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தத் தலத்துக்கு  வந்து  தனது உடம்பில் உள்ள தோல் வியாதி குணமாக வேண்டி வழிபட்டு குணம் அடைந்தார், இதனால் அவர் மனம் மகிழ்ந்து நாகராஜ சுவாமிக்கு இந்த ஆலயத்தைக் கட்டினார்.

மேலும் ஒரு வரலாறும் இந்த கோயிலுக்கு இருக்கிறது

இந்த நாகராஜா திருக்கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு வயல் அமைந்திருந்த இடமாக இருந்த காலத்தில் பெண் ஒருத்தி வயல் அறுவடை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாகத்தின் மேல் பட்டு இரத்தமாக வந்திருக்கிறது இந்தப் பெண் ஓடோடிச் சென்று அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் சொல்ல மக்கள் ஓடி வந்து பார்த்தபோது அங்கு ஒரு நாகர் சிலை மட்டுமே இருந்தது, அந்த சிலையை சுற்றி தென்னை ஓலை கொண்டு கூரை வேய்ந்து கோயிலாக அமைத்து வழிபாடு செய்தனர்

இப்பொழுதும் இப்பொழுதும் மூலவர் அமர்ந்திருக்கும் இடம் தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட இடமாகவே இருக்கிறது.

இந்த கோவிலின் மிகச் சிறந்த விஷயம்

அந்த மூலவர் அமர்ந்திருக்கும் இடம் ஏற்கனவே இருந்த வயல் இருந்த இடமாக இருப்பதினால் எப்பொழுதும் அந்த இடம் நீர் மண் நிறைந்த இடமாக இருக்கும் அந்த இடத்தில் உள்ள மண் தான் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

இந்த கோவிலில் ஆண் நாகம்  பெண் நாகம் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள்

இந்த கோவிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று சற்று அதிகமான கூட்டமாகவே இருக்கும் அதுவும் ஆவணி மாதங்களில் மிக அதிகமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவார்கள் ஆவணி மாதம் இந்த கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது

இந்தக் கோவில் ராகு கேது பரிகார கோவிலாக அமைந்திருப்பதால் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து வணங்கி விட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் வெளிப்புறமாக அமர்ந்திருக்கும் அரசமரத்தின் கீழ் நிறைய நாகர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது அதில் கணபதியும் இருக்கிறார் இந்த நாகர் சிலைகளுக்கு மஞ்சள்தூள் இட்டு பால் அபிஷேகம் செய்து கணபதியை வழிபட்டு மூலவரை வணங்கி மற்றும் இதர தெய்வங்களையும் வணங்கினால் ராகு கேது தோஷ பரிகார நிவர்த்தி ஆகும் என்பதால் எல்லா ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு ஐஸ்வர்யம் அடைகின்றனர்

இந்த கோவிலில்  சிவன், கிருஷ்ணர், கன்னிமூல கணபதி, நாகமணி பூதத்தார், துர்க்கை அம்மன் ,சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணர், ராமர், சீதா தேவி, ஆஞ்சநேயர், இடும்பன் சுவாமி, சாஸ்தா ஆகிய தெய்வங்களும் இருக்கின்றன

இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் நாக தீர்த்தத்தில் கிடைத்ததால் தீர்த்த துர்க்கைஎன்று அழைக்கப்படுகிறார்

இந்த கோவிலில் அதிசய நாகலிங்க பூ  மரம் ஒன்று உள்ளது, இந்த மரத்தில் பூக்கும் இந்தப் பூவானது லிங்கத்தின் மேல் நாகம் அமர்ந்து இருப்பது போல் இருக்கும்,

மேலும் இங்கு அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கு நேர் எதிரே கொடி மரமும் அமையப் பெற்றுள்ளது

இந்த நாகராஜா திருக்கோயில் அதிகாலை 4.30 am மணி முதல் மதியம் 11.30 am மணி வரையும் மாலை 4 pm மணி முதல் 8.30 pm மணி வரை நடை திறந்திருக்கும்

இந்தக் கோவிலில் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இங்கு வரும் பக்தர்களுக்கு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது

Categories
Kanyakumari District Temples

அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் சுசீந்திரம்

அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் சுசீந்திரம்

தாணுமாலயன் கோயில் சுசீந்திரம் ( சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) )

( தாணு + மால் + அயன் = தாணுமாலயன் )

இக்கோயில் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது
இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றாக அமைந்துள்ளனர். ஊர் மிகவும் செழிப்பான ஊர் இந்த கோவிலில் பெரிய ராஜகோபுரம் தெப்பக்குளம் ஆகிய பழமைவாய்ந்த கோயிலுக்கான அடையாளங்களோடு சிவன் பிரம்மா விஷ்ணு மூவருக்குமான கோவிலாகத் திகழ்கிறது

அத்திரி முனிவருக்கும் அனுசுயாவுக்கும் சிவன் பிரம்மா விஷ்ணு காட்சி கொடுத்த இடம் சுசீந்திரம்.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் வந்து மும்மூர்த்திகளை வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் சுசீந்திரம்.

சுசீந்திரம் நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் ( 7 Km ) ஏழாவது

கி மீ – ல் அமைந்துள்ளது

தாணுமாலய சுவாமி கோவில் காலை 4 am மணி முதல் மதியம் 11 am மணி வரை மற்றும் மாலை மாலை 4 pm  மணி முதல் இரவு 8,30 pm மணி வரை திறந்திருக்கும்

தாணுமாலய சாமி கோவில் தரிசனம் செய்யும் முறை

முதலில் தட்சிணாமூர்த்தியை வணங்கி விட்டு நீலகண்ட விநாயகரையும் , நவக்கிரகங்களையும் வணங்கிவிட்டு கொன்றையடி வணங்கி விட்டு மூலஸ்தானம் செல்ல வேண்டும் பின்பு விண்ணவரும் பெருமாளை வணங்க வேண்டும்  பின்பு கங்காள நாதர் வணங்கிவிட்டு கைலாச நாதரை வணங்கி விட்டு சேரவாதல் சாஸ்தாவை வணங்க வேண்டும் ஸ்ரீ ராமர் சீதை பின்பு மகாதேவரை வணங்கிவிட்டு அறம் வளர்த்த  அம்மாவின் தரிசனம் பண்ண வேண்டும் பின்பு ராமேஸ்வரத்து மகாதேவரை வணங்கிவிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சக்கரம் ஜெயந்தீசுவர மகாதேவர்  துர்க்கை அம்மன்  சுப்பிரமணியர் கால பைரவர் வணங்கிவிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயர் தரிசனத்தை முடித்துவிட்டு நடராஜர் இந்திர விநாயகர் வணங்கி முடிக்கலாம்

மேலும் இத்திருக்கோயிலை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் உதாரணமாக தரிசன நேரம் எப்படி, தரிசனம் செய்வது எப்படி இந்த கோயிலை எப்படி வந்தடைவது சுசீந்திரத்தில் வேறு என்னென்ன திருத்தங்கள் உள்ளது, இங்கிருந்து வேறு எந்த கோயிலில் செல்லலாம்  என்ற விபரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் என்னுடைய இமெயில் முகவரி, மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். கமெண்ட்டில் கேட்க்கலாம்

மேலும் இந்த கோவிலில் பார்க்கிங் வசதி மிகச் சிறப்பாக உள்ளது

டீ காபி சாப்பிடுவதற்கு, சாப்பாடு சாப்பிடுவதற்கு வசதியாக ஹோட்டல்கள் உள்ளன

இங்கிருந்து வேறு இடங்களுக்கு நீங்கள் செல்ல வாகன வசதிகள் உள்ளது

நகரின் முக்கிய பகுதியில் இருந்து  இங்கு பேருந்து வசதி உள்ளது

அரசு பேருந்து வசதி உள்ளது